தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செல்சி, ஆஸ்டன் வில்லா வெற்றி

1 mins read
0a81b1af-8e1d-4b72-8e1b-843ecc2b57ad
செல்சி குழு லூட்டன் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. - படம்: ஏஎஃப்பி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து போட்டியில் சனிக்கிழமை இரவு நடந்த ஆட்டத்தில் செல்சி குழு லூட்டன் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே செல்சி ஆதிக்கம் செலுத்தியது. 12, 37, 70வது நிமிடங்களில் செல்சி கோல் அடித்து அசத்தியது.

இருப்பினும் மனம்தளராத லூட்டன் கடைசி 10 நிமிடங்களில் 2 கோல்கள் அடித்து ஆறுதல் பெற்றது.

மற்றோர் ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா குழு பர்ன்லியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றது.

28வது நிமிடத்தில் வில்லா கோல் அடித்தது. அடுத்த இரண்டாவது நிமிடத்தில் பர்ன்லி சமன் செய்தது. அதன் பின்னர் 42வது நிமிடத்தில் வில்லாவும் 71வது நிமிடத்தில் பர்ன்லியும் மீண்டும் கோல் அடித்தன.

பரபரப்பாகச் சென்ற இந்த ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா 89வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனலாட்டி’ வாய்ப்பை கோலாக மாற்றி ஆட்டத்தை தன் வசப்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்