தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிட்டி வெற்றி, யுனைடெட் தோல்வி

1 mins read
dbe533ac-6f0f-49e6-8415-2ee16b8296d8
மான்செஸ்டர் யுனைடெட் குழு நாட்டிங்ஹாம் பாரஸ்ட் குழுவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. - படம்: ஏஎஃப்பி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டியின் வெற்றிப்பயணம் தொடர்கிறது.

சனிக்கிழமை இரவு ஷெஃபீல்ட் யுனைடெட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி வெற்றிபெற்றது.

ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் ரோட்ரி கோல் அடித்தார். அதன் பின்னர் ஜூலியன் அல்வெரஸ் 61வது நிமிடத்தில் மற்றோரு கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

பின்னிரவு நடந்த மற்றோர் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் குழு நாட்டிங்ஹாம் பாரஸ்ட் குழுவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

இப்பருவத்தில் இதுவரை 20 ஆட்டங்களில் விளையாடியுள்ள மான்செஸ்டர் யுனைடெட் 10 ஆட்டங்களில் மட்டுமே வெற்றிபெற்று அதன் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் லிவர்பூல் குழு 42 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 42 புள்ளிகளுடன் ஆஸ்டன் வில்லா இரண்டாவது இடத்தில் உள்ளது. மான்செஸ்டர் சிட்டி 40 புள்ளிகளுடன் மூன்றாவது நிலையில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்