ஆஸ்திரேலியப் பொது விருது: குவிட்டோவா விலகல்

1 mins read
241693be-1552-4b61-9185-857e3a5a3935
செக் குடியரசின் டென்னிஸ்வீராங்கனை குவிட்டோவா. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: இவ்வாண்டின் முதல் டென்னிஸ் கிராண்ட் சிலாம் போட்டியான ஆஸ்திரேலியப் பொதுவிருதுப் போட்டியில் செக் குடியரசு வீராங்கனை பெட்ரா குவிட்டோவா பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம் கணவரும் நீண்டகாலப் பயிற்றுவிப்பாளருமான யிரி வானெக்குக்கும் தனக்கும் குழந்தை பிறக்கப்போவதாக 33 வயது குவிட்டோவா அண்மையில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இருமுறை விம்பிள்டன் பொதுவிருதை வென்றிருக்கும் அவர் ஆஸ்திரேலியப் பொதுவிருதுப் போட்டியில் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

இன்னும் இரண்டு வாரங்களில் இவ்வாண்டின் ஆஸ்திரேலியப் பொது விருதுப் போட்டி தொடங்கவுள்ளது.

குறிப்புச் சொற்கள்