தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெஸ்ட் ஹேம் - பிரைட்டன் ஆட்டம் சமநிலையில் முடிந்தது

1 mins read
ff5bdd36-3510-42de-8f56-783048433abe
வெஸ்ட் ஹேம், பிரைட்டன் இடையிலான ஆட்டத்தில் கோல் ஏதும் அடிக்காததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். - படம்: ஏஎஃப்பி

லண்டன்: செவ்வாய்க்கிழமை பின்னிரவு நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து போட்டியில் வெஸ்ட் ஹேம் குழுவும் பிரைட்டன் அணியும் மோதின.

அந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கத் தவறியதால் ஆட்டம் 0-0 என்று சமநிலையில் முடிந்தது.

இரு அணிகளும் இப்பருவத்தில் பெரிய அணிகள் போல் சிறப்பாகச் செயல்பட்டு வருவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோல் ஏதும் அடிக்காததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

புதன்கிழமை மாலை நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் 34 புள்ளிகளுடன் வெஸ்ட் ஹேம் குழு ஆறாவது இடத்தில் உள்ளது. பிரைட்டன் அணி 31 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் இருக்கிறது.

புள்ளிப்பட்டியலில் லிவர்பூல் குழு 45 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 42 புள்ளிகளுடன் ஆஸ்டன் வில்லா இரண்டாவது இடத்தில் உள்ளது. மான்செஸ்டர் சிட்டி 40 புள்ளிகளுடன் மூன்றாவது நிலையில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்