ஒலிம்பிக் விளையாட்டுகள்: மும்மடங்கான ஹோட்டல் கட்டணம்

1 mins read
a0f0d4b1-78d0-47a1-b75e-325748fa1a1f
இவ்வாண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறவுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

பாரிஸ்: இவ்வாண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளின் முதல் நாளன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஹோட்டல்களில் தங்குவதற்கான கட்டணம் மும்மடங்காகியிருப்பது தெரிய வந்துள்ளது.

அன்றைய தினம் சராசரியாக ஒரு ஹோட்டலில் தங்குவதற்கான விலை குறைந்தது 1,000 யூரோ (1,450 வெள்ளி) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனீட்டாளர் அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் இத்தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும், ஒலிம்பிக் விளையாட்டுகளின் முதல் நாளன்று சில ஹோட்டல்களில் பாதி அறைகளுக்குப் பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகள் ஜூலை மாதம் 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதிவரை பாரிசில் நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்