ரோட்ரிகெஸ் மீண்டும் பிரேசிலிய காற்பந்துக் கூட்டமைப்புத் தலைவராக உத்தரவு

1 mins read
ba65a9a3-6993-4f04-98ea-b7e75150de51
எட்னால்டோ ரொட்ரிகெஸ். - படம்: ஏஎஃப்பி

பிரேசிலியா: பிரேசில் காற்பந்துக் கூட்டமைப்புத் தலைவராக மீண்டும் எட்னால்டோ ரோட்ரிகெசை நியமிக்குமாறு அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் கில்மார் மென்டெஸ் உத்தரவிட்டுள்ளார்.

ரோட்ரிகெஸ் அப்பொறுப்பில் இருக்கக்கூடாது என்று ரியோ டி ஜெனிரோ நகர நீதிமன்றம் ஒன்று சென்ற மாதம் தீர்ப்பளித்தது. ஆனால், அவர் மீண்டும் அப்பொறுப்பில் அமர்த்தப்படவேண்டும் என்று திரு மென்டெஸ் இப்போது உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகளின் காற்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் பங்கேற்க, அனைத்துலகக் காற்பந்துக் கூட்டமைப்பு பிரேசில் அணிக்குத் தடை விதிக்கக்கூடிய அபாயம் நிலவுவது அதற்குக் காரணம் என்று திரு மென்டெஸ் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்