தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எஃப்ஏ கிண்ண ஆட்டத்தில் ஒனானா விளையாடலாம்

1 mins read
611d5ecb-4f89-47d1-a939-7775591f3947
மான்செஸ்டர் யுனைடெட் கோல் காப்பாளர் ஆண்ட்ரே ஒனானா. - படம்: ராய்ட்டர்ஸ்

மான்செஸ்டர்: இங்கிலாந்தின் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட்டும் விகன் அத்லெட்டிக்கும் மோதவுள்ள ஆட்டத்தில் யுனைடெட் கோல் காப்பாளர் ஆண்ட்ரே ஒனானா விளையாடக்கூடும்.

யுனைடெட் நிர்வாகி எரிக் டென் ஹாக் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்க தேசிய அணிகளுக்கான ‘ஆப்பிரிக்க கப் ஆஃப் நே‌ஷன்ஸ்’ போட்டியில் கெமரூன் அணிக்கு விளையாடவுள்ளார் ஒனானா. அதை முன்னிட்டு அவர் சற்று தாமதமாக கெமரூன் அணியுடன் சேர்ந்துகொள்வது குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

வரும் திங்கட்கிழமையன்று யுனைடெட்டும் விகனும் சந்திக்கும் ஆட்டம் நடைபெறவுள்ளது. செவ்வாய்க்கிழமையன்று ‘ஆப்பிரிக்க கப் ஆஃப் நே‌ஷன்ஸ்’ போட்டியை முன்னிட்டு கெமரூன் நட்புமுறை ஆட்டம் ஒன்றில் களமிறங்கவுள்ளது.

இம்மாதம் 15ஆம் தேதியன்று ‘ஆப்பிரிக்க கப் ஆஃப் நே‌ஷன்ஸ்’ போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் கினியுடன் மோதவுள்ளது கெமரூன்.

குறிப்புச் சொற்கள்