இந்தியாவின் பீகார் மாநிலம், பாட்னாவில் உள்ள மொயின் உல் ஹக் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை குழப்பம் நிலவியது.
மும்பை கிரிக்கெட் அணிக்கு எதிரான ரஞ்சி கிண்ண ஆட்டத்திற்கு பீகார் அணி என்று தங்களைக் கூறிக்கொண்டு இரு அணிகள் அரங்கிற்கு வந்ததே அதற்குக் காரணம்.
குழப்பம் காரணமாக பீகார் கிரிக்கெட் சங்க அதிகாரிகளுக்கு இடையே வாக்குவாதம் எழுந்ததால் ஆட்டம் தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டது.
உள்ளூர் காவல்துறை தலையிட்டதைத் தொடர்ந்து பிற்பகல் 1 மணியளவில் ஆட்டம் தொடங்கியது.
அரங்கில் களமிறங்கிய முதல் அணியை சங்கத் தலைவர் ராகேஷ் திவாரி தேர்வுசெய்தார். ஆட்டத்தில் விளையாடிய அணியும் அதுவே. சங்கச் செயலாளர் அமித் குமார் மற்றோர் அணியைத் தேர்வுசெய்தார்.
பீகார் கிரிக்கெட் சங்கம் பின்னர் வெளியிட்ட அறிக்கையில், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட சங்கச் செயலாளர் அமித் குமார் களேபரத்துக்குக் காரணம் என சாடியது.