லண்டன்: சனிக்கிழமை பின்னிரவு நடந்த எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியில் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் விளையாடும் ஆஸ்டன் வில்லா, நியூகாசல் யுனைடெட், செல்சி ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
பிரஸ்டன் நார்த் எண்ட் என்ற அணியுடன் மோதிய செல்சி குழு 4-0 என்ற கோல் கணக்கில் வாகை சூடியது.
ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் அடிக்கத் தவறிய செல்சி இரண்டாவது பாதியில் கோல் மழை பொழிந்தது.
சண்டர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூகாசல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
ஆட்டத்தின் 35, 46, 90 வது நிமிடங்களில் நியூகாசல் அணி கோல்கள் அடித்து அசத்தியது.
ஆஸ்டன் வில்லா 1-0 என்ற கோல் கணக்கில் மிடில்ஸ்பிரோ அணியை வீழ்த்தியது. விறுவிறுப்பாகச் சென்ற இந்த ஆட்டத்தில் 87வது நிமிடத்தில் வில்லா கோல் அடித்து ஆட்டத்தை தன் வசப்படுத்தியது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று அணிகளும் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியில் நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளன.