தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹடர்ஸ்ஃபீல்டை நசுக்கிய சிட்டி

1 mins read
11f31107-c397-49f5-a3f8-936cc181b1aa
எஃப்ஏ கிண்ணப் போட்டியில் வெற்றிபெற்ற மான்செஸ்டர் சிட்டி. - படம்: ராய்ட்டர்ஸ்

மான்செஸ்டர்: ஹடர்ஸ்ஃபீல்ட் டவுனுக்கு எதிரான எஃப்ஏ கிண்ணக் காற்பந்தாட்டத்தில் 5-0 எனும் கோல் கணக்கில் அபார வெற்றிகண்டது மான்செஸ்டர் சிட்டி.

ஆட்டத்தில் சிட்டிக்கு இரண்டு கோல்களைப் போட்டார் ஃபில் ஃபோடன். ஹூலியன் அல்வாரெஸ், ஜெரிமி டொக்கு ஆகியோரும் ஆளுக்கு ஒரு கோல் போட்டனர்.

இன்னொரு கோல், பென் ஜாக்சன் பந்தை சொந்த வலைக்குள் அனுப்பியதால் விழுந்தது.

காயமுற்றிருந்த சிட்டியின் நட்சத்திர மத்திய திடல் வீரர் கெவின் டி பிரோய்ன, நான்கு மாத இடைவெளிக்குப் பிறகு இந்த ஆட்டத்தில் விளையாடினார். அதை எண்ணி மகிழ்ச்சி கொண்டார் சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா.

“அவர் மீண்டும் விளையாடுவது எங்களுக்குப் பெருமகிழ்ச்சி தருகிறது. கெவின் (டி பிரோய்ன்) ஆட்டங்களை வென்று தரக்கூடியவர் என்பதே அதற்குக் காரணம். நீண்டகாலம் காயமுற்றிருந்த அவர் மீண்டும் விளையாடுவது எங்களுக்கு மிகுந்த நற்செய்தி,” என்று பிபிசி ஊடகத்திடம் கார்டியோலா குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்