தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காற்பந்து: பிரேசிலுக்கு எதிராக தடை உத்தரவுகள் இருக்காது

1 mins read
32d657b4-b943-40cc-8c6e-7768cf87129d
பிரேசில் காற்பந்துச் சங்கத் தலைவர் எட்னால்டோ ரொட்ரிகெஸ் (வலது), அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

ரியோ டி ஜெனிரோ: பிரேசில் காற்பந்துச் சங்கத் தலைவராக எட்னால்டோ ரொட்ரிகெஸ் மீண்டும் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் தேசிய அணிக்கு எதிராக தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படமாட்டா என்று அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் அறிவித்துள்ளது.

அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் சட்ட விவகாரப் பிரிவின் இயக்குநர் எமிலியோ கார்சியா ஜனவரி எட்டாம் தேதியன்று இதனைத் தெரிவித்தார்.

ரியோ டி ஜெனிரோ நகரின் நீதிமன்றம் ஒன்று, சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் ஏழாம் தேதியன்று எட்னால்டோ பதவி விலகவேண்டும் என உத்தரவிட்டது. அதனையடுத்து இடைக்காலத் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

பிரேசில் காற்பந்துச் சங்கத்தின் தேர்தல் முறை குறித்து எழுந்த கருத்துவேறுபாட்டால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் எட்னால்டோவை மீண்டும் பிரேசில் காற்பந்துச் சங்கத்தின் தலைவராக நியமிக்கவேண்டும் என்று அந்நாட்டின் மத்திய உச்சநீதிமன்ற அமைச்சர் கில்மார் மென்டெஸ் சென்ற வாரம் உத்தரவிட்டார். எட்னால்டோவைப் பதவிநீக்கம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிடுவது பிரேசில் அணியை அனைத்துலகக் காற்பந்துப் போட்டிகளிலிருந்து நீக்க வழிவகுக்கக்கூடும் என்பது திரு மென்டெசின் வாதம்.

குறிப்புச் சொற்கள்