ரியாத்: பரமவைரியான பார்சிலோனாவை 4-1 எனும் கோல் கணக்கில் பந்தாடி, ஸ்பானியக் காற்பந்து சூப்பர் கிண்ணத்தை ரியால் மட்ரிட் தட்டிச் சென்றது.
இந்த ஆட்டம் ஜனவரி 14ஆம் தேதியன்று சவூதி அரேபியாவில் நடைபெற்றது.
ஆட்டம் தொடங்கியதிலிருந்து ரியால் ஆதிக்கம் செலுத்தியது.
கடந்த ஆண்டு கிண்ணம் ஏந்திய பார்சிலோனாவால் ரியாலின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போனது.
ஆட்டத்தின் முதல் பாதியிலேயே ரியாலின் வினிசியஸ் ஜூனியர் மூன்று கோல்களைப் போட்டு பார்சிலோனாவைக் கதிகலங்க வைத்தார்.
அந்த அணியின் நான்காவது கோலை ரோட்ரிகோ போட்டார்.
பார்சிலோனாவின் ஒரே ஒரு கோலை லெவன்டாவ்ஸ்கி போட்டார்.