தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆசிய கிண்ணம்: மலேசியா, இந்தோனீசியாவுக்கு ஏமாற்றம்

1 mins read
02099a97-4212-4e92-9904-7f0914d2f1f5
மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜோர்தானின் மூன்றாவது கோலைப் போடும் அல்-மார்டி (இடது). - படம்: ராய்ட்டர்ஸ்

டோஹா: ஆசிய கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஜோர்தான், அதன் முதல் ஆட்டத்தில் மலேசியாவை 4-0 எனும் கோல் கணக்கில் திக்குமுக்காடச் செய்தது.

இந்த ‘இ’ பிரிவு ஆட்டத்தில் ஜோர்தானுக்கு ஆளுக்கு இரண்டு கோல்களைப் போட்டனர் மஹ்மூட் அல்-மார்டி, முசா அல்-டமாரி.

அல்-டமாரியின் முதல் கோல் பெனால்டி மூலம் விழுந்தது.

மற்றோர் ‘இ’ பிரிவு ஆட்டத்தில் பஹ்ரேனை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது தென்கொரியா. பிற்பாதியாட்டத்தில் பிரான்சின் பிஎஸ்ஜி குழுவில் விளையாடும் லீ காங்-இன் இரண்டு கோல்களைப் போட்டு தென்கொரியாவை வெல்லச் செய்தார்.

38வது நிமிடத்தில் ஹுவாங் இன்-பியோம் தென்கொரியாவை முன்னுக்கு அனுப்பினார். பின்னர் 51வது நிமிடத்தில் அப்துல்லா டுவாஜி கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

அதற்குப் பிறகு காங்-இன் இரண்டு கோல்களைப் போட்டார்.

‘டி’ பிரிவில் ஈராக், இந்தோனீசியாவை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது. இந்தோனீசியா, மலேசியா இரண்டும் 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஆசிய கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்