லண்டன்: ஆர்சனல் குழு மீண்டும் வெற்றிப் பாதையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. சனிக்கிழமை நடைபெற்ற இங்கிலிஷ் பிரிமியல் லீக் ஆட்டத்தில் அது கிறிஸ்டல் பேலஸ் குழுவை 5-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.
ஆர்சனலின் கேபிரியல், லியான்ட்ரோ ட்ரோசாட் தலா ஒரு கோலையும் கேபிரியல் மார்டினெல்லி இரண்டு கோல்களையும் போட்டனர்.
ஆட்டத்தின் முதற்பாதியில், கிறிஸ்டல் பேலஸ் குழுவின் கோல் காப்பாளர் டீன் ஹெண்டர்சன் தனது சொந்த வலைக்குள்ளே பந்தைத் தவறுதலாகத் தட்டி விட்டதால் அது ஆர்சனலின் கோலாகியது.

