தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புள்ளிப் பட்டியலில் லிவர்பூல் ஐந்து புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் நிலை

1 mins read
9482a00d-de29-4fa9-a391-2a67445f0107
ஆட்டத்தின் முதல் கோலைப் போட்டார் லிவர்பூல் குழுவின் டார்வின் நுனேஸ் (நடுவில்). - படம்: ஏஎஃப்பி

லண்டன்: முன்னணி தாக்குதல் ஆட்டக்காரரான முகம்மது சாலா இல்லாத குறை, தங்களைப் பாதிக்காத வண்ணம், லிவர்பூல் ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடி போர்ன்மத் குழுவை 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டனர்.

ஜனவரி 21ஆம் தேதி நடைபெற்ற இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் லிவர்பூலின் டியோகோ ஜோட்டாவும் டார்வின் நுனேஸும் தலா இரண்டு கோல்களைப் போட்டு தங்கள் குழுவுக்கு வெற்றியைத் தேடி தந்தனர்.

ஐவரி கோஸ்டில் நடைபெறும் ஆப்பிரிக்க நாடுகள் கிண்ணப் போட்டிகளில் எகிப்தைப் பிரதிநிதித்து ஆட முகம்மது சாலா அங்கு சென்றுள்ளார்.

இடைவேளையின்போது இரு குழுக்களும் கோல் ஏதும் போடாமல் சமநிலையில் இருந்தன. ஆனால் பிற்பாதி ஆட்டத்தில் லிவர்பூல் குழு வேகமாக ஆடி நான்கு கோல்கள் போட்டனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்