பிரைட்டன்: வுல்வர்ஹேம்ப்டன் வாண்டரர்சும் பிரைட்டனும் மோதிய இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்தது.
எனினும், இந்த ஆட்டத்தின் மூலம் ஒரு புள்ளியைப் பெற்று பிரைட்டன், லீக் பட்டியலில் மான்செஸ்டர் யுனைடெட்டை விஞ்சியது. பட்டியலில் யுனைடெட்டை பின்னுக்குத் தள்ளி ஏழாம் இடத்தை வகிக்கிறது பிரைட்டன்.
கோல் வித்தியாசத்தில் அக்குழு பட்டியலில் முன்னேறியது. ஒரு குழு போட்ட மொத்த கோல்களிலிருந்து அது விட்டுக்கொடுத்த கோல்களைக் கழித்து கோல் வித்தியாசம் கணக்கிடப்படும்.
இரு குழுக்கள் ஒரே புள்ளிகளைப் பெற்றிருந்தால் கோல் வித்தியாசத்தைக் கொண்டு அவற்றுக்கிடையிலான வேறுபாடு கணக்கிடப்படும்.
அந்த வகையில் கோல் வித்தியாசத்தில் யுனைடெட்டைப் பின்னுக்குத் தள்ளியது பிரைட்டன். இரு குழுக்களும் லீக்கில் தலா 32 புள்ளிகளைப் பெற்றுள்ளன.