பிப்ரவரி 23 முதல் மகளிர் ஐபிஎல் போட்டி

பிப்ரவரி 23 முதல் மகளிர் ஐபிஎல் போட்டி

1 mins read
5cd59048-befc-47df-b42a-a0b9f1e907a4
படம்: - இந்திய ஊடகம்

மும்பை: வரும் பிப்ரவரி 23ஆம் தேதி முதல் மகளிர் ஐபிஎல் என்று அழைக்கப்படும் மகளிர் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகள் (டபிள்யூபிஎல்) நடைபெறவுள்ளன.

டபிள்யூபிஎல் போட்டிகள் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய ஐந்து அணிகள் பங்கேற்றன.

முதலாவது மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை அணி வெற்றியாளர் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இந்த ஆண்டுப் போட்டிகள் பெங்களூரு, டெல்லி மைதானங்களில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இறுதிப் போட்டி மார்ச் 17ஆம் தேதி நடைபெறும்.

கடந்த பருவத்தைப் போல இந்தப் பருவத்திலும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பெற்ற அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2வது மற்றும் 3வது இடம்பெறும் அணிகள் போட்டியிலிருந்து விலகும் குழுவைத் தீர்மானிக்கும் ஆட்டத்தில் மோதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்