தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2023ன் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி: ஐசிசி அறிவிப்பு

2 mins read
24bbaed6-db76-47d1-bebb-2df0aa43d643
படம்: - இந்திய ஊடகம்

துபாய்: ஐசிசி வழங்கும் 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றார் இந்தியாவின் விராத் கோஹ்லி. ஒருநாள் கிரிக்கெட்டின் இவ்வாண்டின் தலைசிறந்த வீரர் விருதை அதிக முறை வென்ற வீரர் என்ற புதிய சாதனையையும் விராத் கோஹ்லி படைத்தார். இந்த விருது நான்காவது முறையாக விராத் கோஹ்லிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடந்த உலகக் கிண்ணப் போட்டியில் சிறப்பாக விளையாடி, அதிக ஓட்டங் களைக் குவித்து சாதனை படைத்த விராத் கோஹ்லி, உலகக் கிண்ணத் தொடரின் தொடர் நாயகன் விருதை வென்றிருந்தார்.

இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில் விராத் கோஹ்லியின் பங்களிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 2003ல் சச்சின் டெண்டுல்கர் செய்த சாதனையை தாண்டி மொத்தமாக இந்தத் தொடரில் மட்டும் 765 ஓட்டங்கள் குவித்தார் கோஹ்லி.

மேலும், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஒரு சதம் உட்பட மூன்று சதங்களை எடுத்ததுடன் தொடரில் 95.62 சராசரி மற்றும் 90.31 ஸ்ட்ரைக் ரேட் கொண்டிருந்தார். மேலும் இதே தொடரில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் எடுத்த வீரர் என்ற சச்சினின் சாதனையையும் கோஹ்லி முறியடித்தார்.

மொத்தமாக, 2023ஆம் ஆண்டில் 24 இன்னிங்ஸ்களில் விளையாடி 6 சதங்கள் மற்றும் எட்டு அரைசதங்களைப் பதிவுசெய்து, 72.47 சராசரியுடன் 1,377 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல், 2023ல் 27 போட்டிகளில் விளையாடி 1,377 ஓட்டங்கள், 1 விக்கெட் மற்றும் 12 கேட்சுகள் எடுத்திருந்தார் விராத் கோஹ்லி. இந்தக் காரணங்களால் ஐசிசி 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை விராத் கோஹ்லிக்கு அறிவித்துள்ளது.

முன்னதாக, ஐசிசி வழங்கும் 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்