நியூசிலாந்து-தென்னாப்பிரிக்கரெ டெஸ்ட் தொடரில் ரவீந்திரா

நியூசிலாந்து-தென்னாப்பிரிக்கரெ டெஸ்ட் தொடரில் ரவீந்திரா

1 mins read
961bef38-90d5-4c64-832f-1308b9c9cb74
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ரச்சின் ரவீந்திரா. - படம்: ராய்ட்டர்ஸ்

ஆக்லாந்து: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு நியூசிலாந்து அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார் இந்திய வம்சாவளி வீரரான ரச்சின் ரவீந்திரா.

இரண்டு ஆட்டங்களைக் கொண்ட அந்த டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

சென்ற ஆண்டின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் அபாரமாக விளையாடினார் 24 வயது ரவீந்திரா. எனினும், சென்ற ஆண்டுக்கான வளர்ந்துவரும் நட்சத்திரத்துக்கு வழங்கப்படும் ஐசிசி விருது அவருக்குக் கிடைக்காமல் போனது.

அந்த ஏமாற்றத்துக்கு ஆறுதலாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணியில் அவர் இடம்பெறப்போவது வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 26) அறிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்