தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லிவர்பூலிலிருந்து வெளியேறும் கிளோப்

1 mins read
042817a2-cd40-4fe5-b61c-a7b4b3741c4d
லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப். - படம்: ஏஎஃப்பி

லிவர்பூல்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான லிவர்பூலின் நிர்வாகி யர்கன் கிளோப், இந்தப் பருவம் நிறைவடைந்த பிறகு பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று (26 ஜனவரி) இந்த அதிர்ச்சித் தகவலை லிவர்பூல் வெளியிட்டது. பருவம் முடிந்த பிறகு தான் பதவி விலக விரும்புவதாக 56 வயது கிளோப் தங்களிடம் தெரியப்படுத்தினார் என்று அக்குழுவின் உரிமையாளர்கள் குறிப்பிட்டனர்.

2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கிளோப் லிவர்பூல் நிர்வாகியாகப் பதவியேற்றார். அவரின் தலைமையில் அக்குழு, ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ணம், இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் விருது, எஃப்ஏ கிண்ணம், லீக் கிண்ணம், குழு உலகக் கிண்ணம் (கிளப் வோர்ல்ட் கப்) ஆகியவற்றைக் கைப்பற்றியது.

கிளோப்புக்குக்கீழ் 2019-20 பருவத்தில் லிவர்பூல் பிரிமியர் லீக் விருதை வென்றது. 30 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு லீக்கில் வாகை சூடியது லிவர்பூல்.

குறிப்புச் சொற்கள்