தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காலிறுதிக்கு முன்னேறியது நைஜீரியா

1 mins read
7f336edb-b2ed-4f54-b3b8-fa4f4eb96568
கேமரூனின் கிறிஸ்டஃபர் வூவும் நைஜீரியாவின் அடேமோலா லூக்மன்னும் பந்துக்காகப் போராடுகின்றனர். - படம்: ஏஎஃப்பி

அபிட்ஜான்: அடுத்த வார இறுதியில் நடைபெறவிருக்கும் ஆப்பிரிக்க நாடுகள் காற்பந்துக் கிண்ண காலிறுதிப் போட்டிக்கு நைஜீரியா தகுதி பெற்றுள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்திய ஆட்டத்தில் அது கேமரூனை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் நைஜீரியாவின் அடேமோலா லூக்மன் தனது அணியின் முதல் கோலைப் போட்டார். பின்னர் ஆட்டம் முடியும் தருவாயில் லூக்மன் இரண்டாவது கோலைப் போட்டு, தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் நைஜீரியா, அங்கோலாவைச் சந்திக்கும். அங்கோலா காலிறுதிக்கு முந்திய தனது ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் நமீபியாவை வென்றது.

குறிப்புச் சொற்கள்