ஆஸ்திரேலிய பொது விருது பெண்கள் இரட்டையர் விருதை வென்ற எலிசி, சியே

ஆஸ்திரேலிய பொது விருது பெண்கள் இரட்டையர் விருதை வென்ற எலிசி, சியே

1 mins read
8543054a-2f82-4064-9562-887705bfead6
ஜனவரி 28ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலிய பொது விருது பெண்கள் இரட்டையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பெல்ஜியத்தின் எலிசி மெர்டென்ஸ் (இடது), தைவானின் சியே சு-வெய். - படம்: இபிஏ

மெல்பர்ன்: ஜனவரி 28ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலிய பொது விருது பெண்கள் இரட்டையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் பெல்ஜியத்தின் எலிசி மெர்டென்ஸ், தைவானின் சியே சு-வெய் இணையினர் வெற்றி பெற்றனர்.

அவர்கள் லாட்வியாவின் ஜெலேனா ஓஸ்டாபென்கோ, உக்ரேனின் லியுட்மைலா கிச்சேனோம் இணையினரை 6-1, 7-5 என்ற ஆட்டக்கணக்கில் வெற்றி கண்டனர்.

எதிரணிப் பெண்கள் தங்களுக்குக் கடும் போட்டியாக இருந்ததாகக் கூறிய எலிசி மெர்டென்ஸ், “அற்புதமான போட்டியை வழங்கிய ஜெலேனா, லியுட்மைலா இருவருக்கும் எங்களின் வாழ்த்துகள்,” என்று கூறினார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்