தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இப்பருவத்தின் இறுதியில் பார்சிலோனா பொறுப்பிலிருந்து விலகும் ஸாவி ஹெர்னாண்டெஸ்

1 mins read
3502c4d8-b0bb-49b7-b463-4845be4528ac
பார்சிலோனா குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஸாவி ஹெர்னன்டர்ஸ். - படம்: இபிஏ

பார்சிலோனா: ஸ்பானிய காற்பந்து லீக்கின் முன்னணிக் குழுக்களில் ஒன்றான பார்சிலோனாவின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஸாவி ஹெர்னாண்டெஸ், இக்காற்பந்துப் பருவத்தின் இறுதியில் பார்சிலோனா குழுவிலிருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

ஜனவரி 27ஆம் தேதி தமது குழு பங்கேற்ற லீக் ஆட்டத்தில் வில்லாரியால் குழுவிடம் 5-3 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்ட பிறகு இவ்வாறு கூறினார்.

“ஜூன் 30ஆம் தேதி நான் இந்தக் காற்பந்துக் குழுவிலிருந்து விலகுவேன். பார்சிலோனா காற்பந்துச் சங்கத்தின் தலைவர், ஊழியர்கள் ஆகியோருடன் கலந்துபேசிய பிறகு நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.” என்று ஸாவி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

லா லீகா பட்டியலில் தற்போது மூன்றாம் இடத்தில் உள்ள பார்சிலோனா, பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ரியால் மட்ரிட்டை விட 10 புள்ளிகள் வித்தியாசத்தில் உள்ளது. கடந்த ஆண்டு அக்குழு வென்ற லீக் பட்டத்தை இம்முறை மீண்டும் வெல்வது என்பது கிட்டத்தட்ட முடியாத காரியம் என்று சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்