ஷமார் ஜோசப்புக்கு டி வில்லியர்ஸ் பாராட்டு

ஷமார் ஜோசப்புக்கு டி வில்லியர்ஸ் பாராட்டு

1 mins read
31768fdc-4678-4e3e-931c-524363d162f2
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷமார் ஜோசப் (இடது), தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ். - படங்கள்: ஊடகம்

ஜோகனஸ்பர்க்: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பனில் நடைபெற்றது.

இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமார் ஜோசப் 7 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலிய மண்ணில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

இதனிடையே, வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக திகழ்ந்த ஷமார் ஜோசப்பின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பாராட்டியுள்ளார் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திரம் டி வில்லியர்ஸ்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்