தோஹா: ஆசிய கிண்ணக் காற்பந்து போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு சவூதி அரேபியாவும் தென்கொரியாவும் மோதின.
அந்த ஆட்டத்தில் இரண்டு அணிகளும் விட்டுக்கொடுக்காமல் கடுமையாக ஆடின.
ஆட்டத்தின் 46வது நிமிடத்தில் சவூதி தனது முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் இறுதி நிமிடம் வரைப் போராடிய தென்கொரியா 99வது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தை சமப்படுத்தியது.
அதன் பின்னர் ஆட்டத்தை ‘பெனால்டி’ முறையில் தென்கொரியா 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது.
இந்த வெற்றியின் மூலம் தென்கொரியா காலிறுதிக்கு முன்னேறியது. பிப்ரவரி 2ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து தென்கொரியா விளையாடவுள்ளது. அந்த ஆட்டத்தில் அனல் பறக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 2ஆம் தேதி நடக்கும் மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் தஜிகிஸ்தான் அணியை ஜோர்தான் எதிர்கொள்கிறது.