தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் லீச்

1 mins read
c979cc47-d31b-4255-a6be-a8d8084d9e1c
இங்கிலாந்தின் ஜாக் லீச். - படம்: ராய்ட்டர்ஸ்

விசாகப்பட்டினம்: இந்தியாவுக்கு எதிராக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 2) தொடங்கும் இரண்டாவது கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துப் பந்துவீச்சாளர் ஜாக் லீச் இடம்பெறமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொடரின் முதல் போட்டியில் 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது. அப்போட்டியில் காயமுற்ற லீச் புதன்கிழமையன்று (ஜனவரி 31) நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்கவில்லை.

லீச்சுக்குப் பதிலாக 20 வயது ‌ஷோயப் ப‌‌ஷீர் அறிமுக வீரராக இரண்டாம் டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், லீச் விரைவில் குணமடைந்து மீண்டும் களமிறங்குவார் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாக இங்கிலாந்து அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்