லண்டன்: வெள்ளிக்கிழமை பின்னிரவு நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் குழு 4-3 என்ற கோல் கணக்கில் உல்வர்ஹேம்ப்டன் அணியை வீழ்த்தியது.
பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் யுனைடெட் குழு கடைசி நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தை வென்றது.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே யுனைடெட் அதிரடியாக விளையாடியது. 5, 22வது நிமிடங்களில் கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது.
இருப்பினும் உல்வ்ஸ் குழு மனம்தளறாமல் போராடியது. 71வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றியது. அதற்குப் பதிலடி தரும் விதமாக 75வது நிமிடத்தில் யுனைடெட் மூன்றாவது கோலை அடித்தது.
இனி ஆட்டத்தை யுனைடெட் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்த்த நிலையில் உல்வ்ஸ் குழு 85, 95வது நிமிடங்களில் கோல்கள் அடித்து ஆட்டத்தை சமப்படுத்தியது.
இந்நிலையில் ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருந்த நிலையில் யுனைடெட் நான்காவது கோல் அடித்து ஆட்டத்தை வென்றது.

