தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இங்கிலாந்தை கதிகலங்கவைத்த பும்ரா

1 mins read
4dba039f-af61-49e8-9ebb-1bb2c4f349d7
இங்கிலாந்தின் ஸ்டோக்சை (கீழே) வெளியேற்றும் பும்ரா (இடது). - படம்: ராய்ட்டர்ஸ்

விசாகப்பட்டினம்: இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாம் போட்டியில் அபராமாக விளையாடினார் இந்தியாவின் நட்சத்திரப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா.

இங்கிலாந்து 45 ஓட்டங்களை எடுப்பதற்குள் பும்ரா ஆறு விக்கெட்டுகளை வெளியேற்றினார். இந்த டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ஓட்டங்களை எடுத்தது.

முன்னதாக இந்தியாவின் யா‌ஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்தார். 22 வயது ஜெய்ஸ்வால், டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதமடித்த மூன்றாவது ஆக இளம் இந்திய வீரராவார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்