அபார வெற்றி கண்ட வில்லா

அபார வெற்றி கண்ட வில்லா

1 mins read
5305350c-f62c-48ab-80fd-a03827af533b
‌ஷெஃபீல்ட் யுனைடெட்டுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஐந்தாவது கோலைப் போட்ட பிறகு கொண்டாடும் வில்லா வீரர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

ஷெஃபீல்ட்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் ‌ஷெஃபீல்ட் யுனைடெட்டை 5-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது ஆஸ்டன் வில்லா.

கடந்த சில ஆட்டங்களாக சற்று தடுமாறிய வில்லாவுக்கு இந்த வெற்றி புத்துயிர் தரும் வண்ணம் அமைந்தது. கடந்த ஆறு லீக் ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே வென்றுள்ளது வில்லா.

ஜான் மெக்கின், ஒலி வாட்கின்ஸ், லியோன் பெய்லி, யூரி டீலமன்ஸ், அலெக்ஸ் மொரேனோ ஆகியோர் கோல்களைப் போட்டனர்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து வில்லா நிர்வாகி யூனாய் எமரி, “இந்த ஆட்டத்துக்கு முன்பு பின்னடைவுக்கு ஈடுகட்டவேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தினோம்,” என்று பிபிசி ஊடகத்திடம் கூறினார். “நாங்கள் கோல்களைப் போட்டோம், கோல் வாய்ப்புகளை உருவாக்கினோம், எதிரணியைத் தடுத்தோம். எதிரணியின் சொந்த மண்ணில் வெற்றிபெறுவது என்பது சவாலானது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“ஒவ்வோர் ஆட்டத்திலும் நாங்கள் கவனம் செலுத்தவேண்டும். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பந்தைப் பெற நாங்கள் விட்டுக்கொடுக்காமல் விளையாடியது அபாரம்,” என்றும் எமரி சொன்னார்.

குறிப்புச் சொற்கள்