செல்சியை ஊதித் தள்ளிய உல்வ்ஸ்

செல்சியை ஊதித் தள்ளிய உல்வ்ஸ்

1 mins read
adaa2d23-2cd3-4559-bc6a-87505936eb5a
செல்சிக்கு எதிரான ஆட்டத்தில் உல்வ்சின் மூன்றாவது கோலைப் போடும் மத்தேயுஸ் குன்யா (இடது). - படம்: இபிஏ

லண்டன்: செல்சிக்கு எதிரான இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் 4-2 எனும் கோல் கணக்கில் வென்றது உல்வர்ஹேம்ப்டன் வாண்டரர்ஸ்.

இந்த ஆட்டத்தில் முதலில் செல்சி முன்னுக்குச் சென்றது. அதற்குப் பிறகு நான்கு கோல்களைப் போட்டு 4-1 எனும் கோல் கணக்கில் முன்னுக்குச் சென்று செல்சியைத் திக்குமுக்காடச் செய்தது வுல்வ்ஸ்.

86வது நிமிடத்தில் தியாகோ சில்வா செல்சியின் ஆறுதல் கோலைப் போட்டார். அக்குழுவின் முதல் கோலைப் போட்டவர் கோல் பாமர்.

உல்வுசுக்கு மூன்று கோல்களைப் போட்டு அசத்தினார் மத்தேயுஸ் குன்யா. ஆக்சல் டிசாசி அக்குழுவின் மற்றொரு கோலைப் போட்டார்.

இதையடுத்து தனது குழுவின் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார் செல்சி நிர்வாகி மொரிசியோ பொக்கட்டினோ.

லீக்கில் சென்ற வாரம் லிவர்பூலிடமும் 4-1 எனும் கோல் கணக்கில் செல்சி தோல்வியடைந்தது.

உல்வ்சுக்கு எதிரான ஆட்டத்தில் செல்சி முதல் கோலைப் போட்ட பிறகு நிலைமை தங்களுக்குச் சாதகமாக இருந்த உணர்வு எழுந்ததாகவும் ஒரு கோலை விட்டுக்கொடுத்த பிறகு எழுந்த அச்சத்தையும் மனவுளைச்சலையும் தனது குழு சரியாகக் கையாளவில்லை என்றும் பொக்கட்டினோ சுட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

“கோல் எண்ணிக்கையை 2-2 என ஆக்க எங்களுக்கு வாய்ப்புகள் இருந்தன. அப்படியிருந்தும் நாங்கள் மூன்றாவது கோலை விட்டுக்கொடுத்தோம். மிகவும் ஏமாற்றமாக உள்ளது. ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இறுதிவரை இருந்து குழுவுக்கு ஆதரவு தந்தோருக்கு நன்றி. எங்களை மன்னியுங்கள். நாங்கள் மிகவும் வருத்தமாக இருக்கிறோம்,” என்றார் பொக்கட்டினோ.

குறிப்புச் சொற்கள்