தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரண்டாவது டெஸ்ட்: இந்தியா அசத்தல் வெற்றி

1 mins read
335c057c-6200-4c6f-87c7-ecc5f7a42c0e
அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் தொடரை 1-1 என்று சமப்படுத்தியுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

விசாகப்பட்டினம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் தொடரை 1-1 என்று சமப்படுத்தியுள்ளது.

பூவா தலையாவில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்ததடித்தது. யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் இரட்டை சதத்தால் இந்தியா அதன் முதல் இன்னிங்சில் 396 ஓட்டங்கள் குவித்தது.

ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்சில் 253 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இரண்டாவது இன்னிங்சில் 255 ஓட்டங்கள் எடுத்த இந்திய அணி இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக 399 ஓட்டங்களை நிர்ணயித்தது.

கடினமான இலக்கை விரட்டிய இங்கிலாந்து சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 292 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

ஐந்து ஆட்டம் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது ஆட்டம் ராஜ்கோட்டில் பிப்ரவரி 15ஆம் தேதி நடக்கவுள்ளது.

குறிப்புச் சொற்கள்