இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய ஜோர்தான்; தென்கொரியா தோற்று வெளியேறியது

இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய ஜோர்தான்; தென்கொரியா தோற்று வெளியேறியது

1 mins read
98eac7f5-4921-4c17-beb2-47278a3b6359
ஜோர்தானின் முதல் கோலைப் போட்ட யஸான் அல் நைமத் (நடுவில்). - படம்: ராய்ட்டர்ஸ்

தோஹா: ஆசியக் கிண்ண காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு ஜோர்தான் தகுதி பெற்றுள்ளது.

பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தென்கொரியாவை அது 2-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது.

ஜெர்மனியின் முன்னாள் நட்சத்திர வீரர் யர்கன் கிளின்ஸ்மனைப் பயிற்றுவிப்பாளராகக் கொண்ட தென்கொரியா இந்த ஆட்டத்தை எளிதில் கைப்பற்றும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வெற்றிக் கனியைப் பறித்த ஜோர்தான் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆசியக் கிண்ண காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு ஜோர்தான் தகுதி பெற்றிருப்பது இது முதல்முறை.

மற்றோர் அரையிறுதி ஆட்டத்தில் போட்டியை ஏற்று நடத்தும் கத்தாரும் ஈரானும் மோதுகின்றன.

குறிப்புச் சொற்கள்