தோஹா: ஆசியக் கிண்ண காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு கத்தார் தகுதி பெற்றுள்ளது.
பிப்ரவரி 7ஆம் தேதியன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஈரானை அது 3-2 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது.
இப்போட்டியை கத்தார் ஏற்று நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் அல்மோயிஸ் அலி போட்ட கோல் கத்தாரின் வெற்றி கோலாக அமைந்தது.
இறுதி ஆட்டத்தில் கத்தாரும் ஜோர்தானும் மோதுகின்றன.

