ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: முதலிடம் பிடித்து பும்ரா சாதனை

துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான அனைத்துலக கிரிக்கெட் மன்ற (ஐசிசி) தரவரிசையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இதில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் 30 வயதான ஜஸ்பிரீத் பும்ரா.

ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை கைப்பற்றும் 4வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் பும்ரா. இதற்கு முன்னர் அந்த இடத்தை ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பிஷன் சிங் பேடி ஆகியோரும் அலங்கரித்துள்ளனர்.

விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் பும்ராவின் அபாரமான பந்து வீச்சால் இந்திய அணி 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1-1 எனச் சமநிலை அடையச் செய்தது.

பும்ரா முதலிடத்துக்கு முன்னேறிய நிலையில் அந்த இடத்தில் கடந்த 11 மாதங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

ஜஸ்பிரீத் பும்ரா 881 புள்ளிகளுடன் 3 இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில் தென்னாப்பிரிக்காவின் ககிசோ ரபாடா 851 புள்ளிகளுடன் 2வது இடத்தில் தொடர்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!