தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இபிஎல் பட்டியலின் முதல் இடத்துக்குச் சென்றது லிவர்பூல்

1 mins read
3835c4c1-83fb-47e4-92d0-6ee246be0850
பெர்ன்லி குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் லிவர்பூல் குழுவின் டியோகா ஜோட்டா போட்ட கோலை கொண்டாடுகிறார் லுயிஸ் டியாஸ். - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: தனது சொந்த திடலில் எவர்ட்டன் குழுவை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்த மான்செஸ்டர் சிட்டி குழு, சில மணிநேரத்துக்குள் அந்த இடத்திலிருந்து இரண்டாம் இடத்துக்கு இறங்க வேண்டியதாயிற்று.

அதன் பிறகு நடந்த மற்றொரு பிரிமியர் லீக் ஆட்டத்தில் லிவர்பூல் குழு, 3-1 என்ற கோல் கணக்கில் பெர்ன்லி குழுவை வெற்றி கண்டு மேலும் மூன்று புள்ளிகள் பெற்று, லீக் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது. இந்த முடிவு, வரும் வாரங்களில் லீக் பட்டியலில் முன்னிலைக்குச் செல்லும் குழுக்களின் வேட்கையைத் தெளிவாகக் காட்டுகிறது.

மான்செஸ்டர் சிட்டி குழுவின் இரண்டு கோல்களையும் எர்லிங் ஹாலண்ட் போட்டார்.

லிவர்பூலின் மூன்று கோல்களை டியோகா ஜோட்டா, லுயிஸ் டியாஸ், டார்வின் நுனேஸ் ஆகியோர் போட்டனர்.

தற்போது லிவர்பூல் பட்டியலில் முதல் இடத்தில் 54 புள்ளிகளைப் பெற்றுள்ளது. சிட்டி, 52 புள்ளிகளுடன் இரண்டாம் நிலையில் இருந்தாலும் அதற்கு இன்னும் ஓர் ஆட்டம் கைவசம் உள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்