நெடுந்தொலைவு ஓட்ட நட்சத்திரம் விபத்தில் மாண்டார்

1 mins read
f905ee51-4d19-41ad-a659-c987b3dbdd87
24 வயது கெல்வின் கிப்டும். - கோப்புப் படம்: இணையம்

நைரோபி: நெடுந்தொலைவு ஓட்ட நட்சத்திரமான கென்யாவின் கெல்வின் கிப்டும் சாலை விபத்தில் மாண்டார்.

நெடுந்தொலைவு ஓட்டப் பந்தயத்தை ஆகக் குறைந்த நேரத்தில் முடித்தவர் எனும் பெருமை இவரைச் சேரும்.

இவர் பதிவு செய்துள்ள உலக சாதனை நேரம் இன்னும் முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 11ஆம் தேதியன்று கென்யாவின் மேற்குப் பகுதியில் 24 வயது கிப்டும் மற்றும் அவரது பயிற்றுவிப்பாளரான ருவான்டாவின் ஜெர்வேஸ் ஹகிஸிமானா இருவரும் காரில் பயணம் செய்துகொண்டிருந்தனர்.

அப்போது அந்த கார் விபத்துக்குள்ளானதில் இருவரும் உயிரிழந்தனர்.

இவ்வாண்டு பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கிப்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

கிப்டுமின் இறப்பு கென்யாவுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய இழப்பு என்று அந்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் அபாபு நம்வாம்பா தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
விளையாட்டுவிபத்து