தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பங்ளாதேஷ் கிரிக்கெட் அணித் தலைவராக ஷான்டோ நியமனம்

1 mins read
339197bb-829f-4978-94c8-426d7d91ff7d
பங்ளாதேஷ் கிரிக்கெட் அணித் தலைவர் நஜ்முல் உசேன் ஷான்டோ. - படம்: ராய்ட்டர்ஸ்

டாக்கா: பங்ளாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவராக அவ்வணியின் பந்தடிப்பாளரான நஜ்முல் உசேன் ஷான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி, டி20 போட்டி ஆகியவற்றுக்கு அவர் அணித் தலைவராகச் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீசிலும் அமெரிக்காவிலும் நடைபெறும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்ளாதேஷ் கிரிக்கெட் அணிக்கு ஷான்டோ தலைமை தாங்குவார் என்று பங்ளாதேஷ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு பங்ளாதேஷ் அணித் தலைவராக இருந்த ஷாகிப் அல் ஹசனுக்கு இடது கண்ணில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

உலகக் கிண்ணப் போட்டியில் அவரால் களமிறங்க முடியுமா என்று சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அவருக்குப் பதிலாக ஷான்டோ அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்