உலக நீர் விளையாட்டுப் போட்டிகளில் களமிறங்கும் 100 வயது ஈரானிய முக்குளிப்பாளர்

உலக நீர் விளையாட்டுப் போட்டிகளில் களமிறங்கும் 100 வயது ஈரானிய முக்குளிப்பாளர்

1 mins read
28fa48ad-4864-42f7-8030-d745765aaf26
ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் திரு தகி அஸ்காரி (நடுவில்). - படம்: ராய்ட்டர்ஸ்

இவ்வாண்டின் உலக நீர் விளையாட்டுப் போட்டிகள் பிப்ரவரி மாதம் தொடங்குகிறது.

இதில் 100 வயது ஈரானிய முக்குளிப்பாளர் தகி அஸ்காரி போட்டியிடுகிறார்.

போட்டியில் களமிறங்கும் ஆக மூத்த வீரர் எனும் பெருமை இவரைச் சேரும்.

1951ஆம் ஆண்டு இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் திரு அஸ்காரி வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றார்.

தேசிய அளவில் ஆகக் கடைசியாக அவர் ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்பு போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தப் போட்டியில் அவர் தங்கம் வென்றார்.

அப்போது அவருக்கு 41 வயது.

குறிப்புச் சொற்கள்