தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயர்னுக்கு அதிர்ச்சி தந்த லாஸியோ

1 mins read
6c7d7207-2a1d-492c-a021-a42a5d4157cf
பயர்னுக்கு எதிரான ஆட்டத்தின் ஒரே கோலைப் போடும் லாஸியோவின் இம்மொபிலே (இடமிருந்து இரண்டாவது). - படம்: ஏஎஃப்பி

ரோம்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜெர்மனியின் பயர்ன் மியூனிக்கை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது இத்தாலியின் லாஸியோ.

ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை லாஸியோவின் சிரோ இம்மொபிலே கோலாக்கினார்.

பயர்னின் டாயோட் உப்பமெக்கானோ, லாஸியோவின் குஸ்டாவ் ஐசாக்சனைத் தடுக்கி விட்டதால் லாஸியோவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு உப்பமெக்கானோ ஆட்டத்திலிருந்து நீக்கப்பட்டார்.

காலிறுதிக்கு முந்தைய சுற்றின் மற்றோர் ஆட்டத்தில் பிரான்சின் பிஎஸ்ஜி, ஸ்பெயினின் ரியால் சோசிடாட்டை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது. கிலியோன் எம்பாப்பே, பிராட்லி பர்க்கோலா ஆகியோர் கோல்களைப் போட்டனர்.

இரண்டு கோல்களும் ஆட்டத்தின் பிற்பாதியில் விழுந்தன.

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இடம்பெறும் குழுக்கள் ஒன்றுடன் ஒன்று இருமுறை மோதும். இரண்டு ஆட்டங்களின் மொத்த கோல் எண்ணிக்கையைக் கொண்டு வெற்றிபெறும் குழு எது என்பது தீர்மானிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்