ஃபிஃபா பட்டியலில் 12 இடங்கள் முன்னேறிய தாய்லாந்து

ஃபிஃபா பட்டியலில் 12 இடங்கள் முன்னேறிய தாய்லாந்து

1 mins read
ec40db6d-c526-47a7-8ff7-989f0e3a6221
கத்தாரில் நடைபெற்ற ஆசியக் கிண்ண காற்பந்துப் போட்டியில் காலிறுதிக்கு முந்திய சுற்று வரை தாய்லாந்துக் குழு சென்றது. - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்தின் ஆண்கள் காற்பந்துக் குழு, அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் (ஃபிஃபா) பட்டியலில் 12 இடங்கள் முன்னேறியுள்ளது.

113வது இடத்தில் இருந்த தாய்லாந்து, தற்போது 101வது இடத்தில் உள்ளது.

தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த மற்ற குழுக்களைவிட தாய்லாந்து உயர்நிலையில் உள்ளது.

அண்மையில் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசியக் கிண்ண காற்பந்துப் போட்டியில் தாய்லாந்து சிறப்பாகச் செயல்பட்டதே பட்டியலில் முன்னேறியதற்கான முக்கிய காரணம் என்று தாய்லாந்துக் காற்பந்துச் சங்கம் தெரிவித்துள்ளது.

அப்போட்டியில் அது காலிறுதிக்கு முந்திய சுற்று வரை சென்றது.

அந்த ஆட்டத்தில் அது 2-1 எனும் கோல் கணக்கில் உஸ்பெக்கிஸ்தானிடம் தோற்றது.

குறிப்புச் சொற்கள்