தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கத்துக்கு வெஸ்ட் கோஸ்ட்டில் சொந்த பயிற்சி நிலையம்

1 mins read
2964df5b-c6f0-48e9-9d6f-10739c07a19b
2023 தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் வாகை சூடிய சிங்கப்பூர் ஆண்கள் கிரிக்கெட் அணி. - படம்: ஸ்போர்ட் சிங்கப்பூர் அமைப்பு

சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கத்துக்கு 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக அதற்குச் சொந்தமான தேசிய பயிற்சி நிலையம் கிடைத்துள்ளது.

இந்தப் புதிய பயிற்சி நிலையம் வெஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் அமைந்துள்ளது.

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் தரநிலை நிர்ணயிப்பு ஆட்டங்கள் போன்ற முக்கிய போட்டிகளுக்கு தேசிய குழுக்களைத் தயார்ப்படுத்த இந்தப் புதிய பயிற்சி நிலையம் பயன்படுத்தப்படும் என்று பிப்ரவரி 16ஆம் தேதியன்று ஸ்போர்ட் சிங்கப்பூர் அமைப்பு அறிவித்தது.

கிரிக்கெட் பயிற்சிக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இந்தப் புதிய நிலையத்தில் உள்ளன.

சிங்கப்பூர் ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் இவ்வாண்டின் நடுப்பகுதியிலிருந்து புதிய பயிற்சி நிலையத்தில் பயிற்சி செய்யத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஆண்கள், மகளிர் கிரிக்கெட் அணிகள் பயிற்சி செய்ய வெஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் உள்ள இந்த நிலப்பகுதியை பெற்றுத் தர உதவிய கலாசார, சமூக, இளையர்த்துறை அமைச்சுக்கும் ஸ்போர்ட் சிங்கப்பூர் அமைப்புக்கும் சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் திரு மஹ்முட் கஸ்வானி நன்றி தெரிவித்துக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்