லண்டன்: இங்கிலிஷ் பிரீமியர் லீக் காற்பந்துப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு மான்செஸ்டர் யுனைடெட் அணியை லுட்டன் குழு எதிர்கொள்கிறது.
தொடர்ந்து மூன்று பிரீமியர் லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ள யுனைடெட் லூட்டனையும் வீழ்த்த தயாராகி வருகிறது.
இப்பருவத்தில் இதுவரை 24 ஆட்டங்களில் விளையாடியுள்ள மான்செஸ்டர் யுனைடெட் 13 ஆட்டங்களில் வெற்றியும் 9 ஆட்டங்களிலும் தோல்வியையும் தழுவியுள்ளது. சீராக புள்ளிகளைக் குவிக்க தவறுவதால் அதன் சாம்பியன்ஸ் லீக் கனவு கேள்விக்குறியாக உள்ளது.
இருப்பினும் அந்த அணியின் முன்னணி ஆட்டக்காரர்களும், இளம் வீரர்களும் நம்பிக்கை தரும் வகையில் விளையாடுவதால் யுனைடெட் அணியின் வெற்றி நடை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது புள்ளிப்பட்டியலில் யுனைடெட் 41 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.
சனிக்கிழமை மாலை நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் லிவர்பூல் குழு 54 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 52 புள்ளிகளுடன் மான்செஸ்டர் சிட்டி இரண்டாவது இடத்தில் உள்ளது.