லண்டன்: சனிக்கிழமையன்று (17 பிப்ரவரி) பிரென்ட்ஃபர்டுக்கு எதிரான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தின் தொடக்கத்தில் களமிறங்கிய லிவர்பூல் விளையாட்டாளர்கள் அனைவரும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்; 11 வீரர்கள் 11 நாடுகளிலிருந்து வந்தவர்கள்.
லிவர்பூலின் 132 ஆண்டு வரலாற்றில் இவ்வாறு நிகழ்ந்தது இதுவே முதல்முறையாகும். அதோடு, கர்ட்டிஸ் ஜோன்ஸ் மட்டும்தான் ஆட்டத்தின் தொடக்கத்தில் களமிறங்கிய லிவர்பூலின் ஒரே இங்கிலாந்து வீரராவார்.
4-1 எனும் கோல் கணக்கில் இந்த ஆட்டத்தில் வெற்றிகண்டது லிவர்பூல். டார்வின் நுனியெஸ், அலெக்சிஸ் மெக்காலிஸ்டர், முகம்மது சாலா, கொடி காக்போ ஆகியோர் லிவர்பூலின் கோல்களைப் போட்டனர். கோல் எண்ணிக்கை 3-0 என இருந்தபோது பிரென்ட்ஃபர்டின் ஐவன் டோனி அக்குழுவுக்கு ஒரு கோலைப் போட்டார்.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் லிவர்பூல் தற்போது முதலிடத்தை வகிக்கிறது.