பாட்மின்டன் ஆசியா போட்டி: வரலாறு படைத்த இந்தியா

1 mins read
3fa0b00b-11c4-4b15-9941-aaf3c8be947a
வரலாறு படைத்த இந்திய வீராங்கனைகள். - படம்: இந்திய பூப்பந்துச் சங்கம்

‌ஷா ஆலம்: இவ்வாண்டின் பாட்மின்டன் ஆசியா பூப்பந்துப் போட்டியின் பெண்கள் குழுப் பிரிவில் முதன்முறையாக வாகை சூடியது இந்தியா.

மலேசியாவில் நடைபெறும் போட்டியின் இறுதியாட்டத்தில் 3-2 எனும் ஆட்டக் கணக்கில் இந்தியா, தாய்லாந்தை வென்றது.

ஈராண்டுகளுக்கு முன்பு தாமஸ் கிண்ணத்தை வென்று அசத்திய இந்தியா, இம்முறை பாட்மின்டன் ஆசியா போட்டியிலும் சிறப்பாக விளையாடியது. சீனா, ஹாங்காங், ஜப்பான், தாய்லாந்து ஆகியவற்றை வென்று கிண்ணத்தைக் கைப்பற்றியது இந்தியா.

ஞாயிற்றுக்கிழமையன்று (18 பிப்ரவரி) மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத் தலைநகர் ‌ஷா ஆலமில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் பிவி சிந்து, திரீசா ஜாலி, அன்மோல் கார்ப், பிரியா கொஞ்செங்பாம், ‌ஷ்ருதி மி‌ஷ்ரா ஆகியோரைக் கொண்ட இந்திய அணி வெற்றிபெற்றது. காயமுற்றிருந்த பிவி சிந்து, குணமடைந்த பிறகு முதன்முறையாகப் பங்கேற்ற போட்டி இது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்