மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் லூட்டன் டவுனை 2-1 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட்ட தோற்கடித்தது.
மேலும் பல கோல்களைப் போட மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு வாய்ப்புகள் கிடைத்தன.
ஆனால் அவற்றை அது நழுவவிட்டது.
இந்நிலையில், கோல் போட கிடைக்கும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமது வீரர்களிடம் யுனைடெட்டின் நிர்வாகி எரிக் டென் ஹாக் வலியுறுத்தியுள்ளார்.
யுனைடெட் அதன் ஆக அண்மைய நான்கு ஆட்டங்களில் வெற்றி பெற்றது.
ஆனால் அவற்றில் மூன்று ஆட்டங்களில் அது ஒரு கோல் வித்தியாசத்தில் மட்டுமே வென்றது.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் யுனைடெட் ஆறாவது இடத்தில் உள்ளது.