ஜெர்மன் காற்பந்து சகாப்தம் ஆண்ட்ரேஸ் பிரேம காலமானார்

ஜெர்மன் காற்பந்து சகாப்தம் ஆண்ட்ரேஸ் பிரேம காலமானார்

1 mins read
e23b1cb7-dc74-4c71-899b-c7f112a7efe3
1990ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெஸ்ட் ஜெர்மனியின் வெற்றி கோலைப் போட்டு சக ஆட்டக்காரர் யர்கன் கிளின்ஸ்மனுடன் கொண்டாடிய ஆண்ட்ரேஸ் பிரேம (இடது). - படம் இணையம்:
multi-img1 of 2

பெர்லின்: ஜெர்மன் காற்பந்து சகாப்தம் ஆண்ட்ரேஸ் பிரேம பிப்ரவரி 20ஆம் தேதி காலாமானார்.

அவருக்கு 63 வயது.

இந்தத் தகவலை அவரது முன்னாள் குழுவான பயர்ன் மியூனிக் தெரிவித்தது.

1990ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் 1-0 எனும் கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய வெஸ்ட் ஜெர்மனி கிண்ணம் ஏந்தியது.

அர்ஜென்டினாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தின் 85வது நிமிடத்தில் வெஸ்ட் ஜெர்மனிக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி வெற்றி கோலைப் போட்டவர் ஆண்ட்ரேஸ் பிரேம என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனியின் மற்றொரு காற்பந்து சகாப்தமான ஃபிரான்ஸ் பெக்கன்பாவர் இவ்வாண்டு ஜனவரி மாதம் காலமானார்.

குறிப்புச் சொற்கள்