லிஸ்பன்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் ஆர்சனல் குழுவும் எஃப்சி போர்ட்டோ குழுவும் புதன்கிழமை பின்னிரவு மோதின.
விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்த இந்த ஆட்டம் சற்று மெதுவாக தான் சென்றது.
இருப்பினும் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் போர்ட்டோ குழுவின் வெண்டர்சன் காலேனோ அசத்தலாக கோல் அடித்து 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனலை வீழ்த்தினார்.
“ஆர்சனல் காலிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாட வேண்டும். கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தவில்லை, கோல் அடிக்க போதிய முயற்சி எடுக்காதது தோல்வியைத் தந்தது,” என்று ஆர்சனல் நிர்வாகி மிக்கெல் அர்டேட்டா தெரிவித்தார்.
ஆர்சனல் குழு வரும் மார்ச் 13ஆம் தேதி போர்ட்டோ அணியுடன் மீண்டும் விளையாடவுள்ளது.
நள்ளிரவுக்கு பின் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பார்சிலோனா குழுவும் நேப்போலி குழுவும் மோதின.
அந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

