லண்டன்: இங்கிலிஷ் பிரீமியர் லீக் காற்பந்துப் போட்டியில் புதன்கிழமை பின்னிரவு நடந்த ஆட்டத்தில் லிவர்பூல் அணியும் லுட்டன் குழுவும் மோதின.
அந்த ஆட்டத்தில் லிவர்பூல் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் லூட்டன் குழு முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது. முதல் பாதியில் லிவர்பூல் கோல் அடிக்க முடியாமல் திணறியது.
இருப்பினும், லிவர்பூல் இரண்டாவது பாதியின் தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. அது 56, 58, 71, 90வது நிமிடங்களில் கோல் அடித்து ஆட்டத்தை தன்வசப்படுத்தியது.
வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, பட்டியலில் லிவர்பூல் குழு 60 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 56 புள்ளிகளுடன் மான்செஸ்டர் சிட்டி இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் 55 புள்ளிகளுடன் ஆர்சனல் உள்ளது.
லூட்டன் குழு 20 புள்ளிகளுடன் 18வது இடத்தில் தடுமாறுகிறது.