லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் நியூகாசல் யுனைடெட்டை 4-1 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் பந்தாடியது.
இந்த வெற்றியின் மூலம் 26 ஆட்டங்கள் விளையாடிய நிலையில், 58 புள்ளிகளுடன் ஆர்சனல் லீக் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
நியூகாசல் 37 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது.
ஆட்டத்தின் முற்பாதியில் நியூகாசலின் சுவென் போட்மன் போட்ட சொந்த கோலும் காய் ஹவெர்ட்ஸ் போட்ட கோலும் ஆர்சனலை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றன.
இடைவேளையின்போது ஆர்சனல் 2-0 எனும் கோல் கணக்கின் முன்னிலை வகித்தது.
பிற்பாதி ஆட்டத்தில் ஆர்சனல் மேலும் இரண்டு கோல்களைப் போட்டது.
ஆட்டத்தின் 84வது நிமிடத்தில் நியூகாசல் ஆறுதல் கோல் ஒன்றைப் போட்டது.