ரொனால்டோவுக்கு நெருக்கடி

ரொனால்டோவுக்கு நெருக்கடி

1 mins read
401b50a3-0dd0-43d0-bdca-40e0f8ab0bec
ஆட்டம் முடிந்த பிறகு ரொனால்டோ ரசிகர்களைப் பார்த்து தகாத முறையில் கை அசைத்துள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்

ரியாத்: காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஞாயிற்றுக்கிழமை ரொனால்டோவின் அல்நசர் அணியும் அல் ‌‌‌ஷாபாப் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடந்த அந்த ஆட்டத்தில் அல்நசர் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஆட்டம் முடிந்த பிறகு ரொனால்டோ ரசிகர்களைப் பார்த்து தகாத முறையில் கை அசைத்துள்ளார். அது தொடர்பான காணொளி சமூக ஊடகத்தில் பரவியது.

ரசிகர்கள் “மெஸ்ஸி மெஸ்ஸி” என்று கூச்சலிட்டதால் ரொனால்டோ அதை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ரொனால்டோவின் கை அசைவுகள் தொலைக்காட்சிகளில் நேரலை ஆகவில்லை.

இச்சம்பவம் குறித்து சவூதி அரேபியா காற்பந்து சங்கம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

ரொனால்டோ மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சவூதி காற்பந்து கவனிப்பாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்